பெண் நிர்வாகிகள் மீது அவதூறு:
குஷ்பு, காய்தரி ரகுராம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை திமுக நிர்வாகி சைதை சாதிக் பொதுவெளியில் அவதூறாக பேசிவிட்டார்;ஆனால் அவர் மீது திமுக தலைமை இதுவரை எந்த நடவடிக்கையும் எடு்க்கவிலலை என்பதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலீசாரின் முன் அனுமதியின்றி திடுதிப்பென ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்.
அண்ணாமலை ஆர்ப்பாட்டம்:
கட்சியின் மகளிர் அணி புடை சூழ, கொட்டும் மழையில் குடை பிடித்து கொண்டு, அவதூறுக்கு ஆளான குஷ்புவோ, காயத்ரி ரகுராமோ இல்லாமல், அண்ணாமலை அரங்கேற்றிய அதிரடி ஆர்ப்பாட்டம் முடிந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை.
அதற்குள் தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. திமுகவில் இணைந்து வந்து பாஜகவில் ஐக்கியமான திருச்சி சூர்யா சிவா, மாநில பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணை தகாத வார்த்ததைகளால் பேசி விவகாரத்தை கண்டித்த அக்கட்சியின் பெண் நிர்வாகியாக நேற்றுவரை இகுந்தவந்த நடிகை காயத்ரி ரகுராமின் தலை உருண்டுள்ளது.
காய்தரி ரகுராம் நீக்கம்:
கட்சியின் பெண் நிர்வாகியை மோசமாக பேசிய திருச்சி சூர்யா சிவா மீது கடும் நடவடிக்கை எடுப்பதைவிடுத்து, அவரது பேச்சை கண்டித்ததற்காக, கட்சிக்கு களம் கற்பித்ததாக காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து ஆறு மாதமே ஆனாலும் நீக்கியது சரியா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் பரவலாக எழுந்துள்ளது. காயத்ரி ரகுராமை, அண்ணாமலை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதற்கு திருச்சி சூர்யா சிவா – டெய்சி சரண் விவகாரம் மட்டும்தான் காரணமா? அவர் மீதான கட்சியின் மாநில தலைமையின் அதிரடி நடவடிக்கைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா?
அவர் பெரிய ஆளாகவே இருக்கட்டும்: இவை குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழுக்கு நடிகை காயத்ரி ரகுராம் அளித்த பிரத்யேக பேட்டி கூறியது:
பிரதமர் நரேந்திர மோடியின் மீதுள்ள மரியாதை காரணமாகவும், தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று முழங்கிய தமிழிசை சௌந்தரராஜன் மீதான மதிப்பின் காரணமாகவும் பாஜகவில் இணைந்தவள் நான். அது 2021 தமிழக சட்டமன்ற தேர்தலாக இருக்கட்டும்…. அதற்கு பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலாக இருக்கட்டும்….. பாஜகவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் களப்பணி ஆற்றி உள்ளேன்.
இப்படி முழு ஈடுபாட்டுடன் இயங்கிவந்த என்னை கட்சிக்கு களங்கம் கற்பித்ததாக யார சொன்னாலும் அதனை ஏற்றுகொள்ள முடியாது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் . ஆனால் என்னை பார்த்து அவர் கட்சி்க்கு களங்கம் கற்பித்துவிட்டதாக கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவர் ஆதரவாளர் என்பதாலா?:
சில, பல மாதங்களுக்கு முன் தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மாநில துணைத் தலைவராக இருநத கேடி ராகவனின் ஆதரவாளராக கட்சித் தலைமை என்னைப் பார்ப்பதாகவும், அதனால்தான் என் மீது இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் உலவி வருகிறது. ஆனால் அதனால்தான் என்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்களா என தெரியாது. ஆனால் கட்சிக்கு களங்கம் கற்பித்தேன் என்று என் மீது அண்ணாமலை அபாண்டமாக குற்றம்சாட்டி உள்ளதை ஒருகாலும் ஏற்றுகொள்ள இயலாது.
திமுகவிலா?:
பாஜகவில் இருந்து என்னை தற்காலிகாக நீக்கிய உடனேயே, உதயநிதி ஸ்டாலின் அழைத்தால் திமுகவில் இணைவீர்களா? என்று என்னிடம் பலரும் கேட்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பாஜகவில் மீண்டும் என்னை சேர்த்தாலோ. சேர்க்காமல் விட்டாலோ… எப்படி இருந்தால் உணர்வுபூர்வமான ஒரு தொண்டனாக கடைசி வரை நான் பாஜகவில்தான் இருப்பேன் என்பது மட்டும் உறுதி என்கிறார் காயத்ரி ரகுராம்.