நாட்டில் 600 மில்லியன் டொலர்களாக இருந்த மாதாந்த எரிபொருள் விலை தற்போது 200-250 மில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
எரிசக்தி துறையை மறுசீரமைக்க கோரிக்கை
தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது சிறந்து விளங்குவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையின் எரிசக்தி துறையை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பெருந்தோட்டத்துறை , கைத்தொழில்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.