இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டெல்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த trade fair-ல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு விதமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்றிருக்கின்றன.
வித்தியாசமான முன்னெடுப்புகளை கொண்ட நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றிருக்கும் நிலையில், தனித்துவமாக இருக்கும் மும்பையைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மட்டும் பலரது கவனத்தையும் ஈர்த்ததோடு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது.
அது என்னவெனில், நமக்கான இறுதிச் சடங்கை முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளும் வகையிலான கம்பெனி இது! இது மும்பையைச் சேர்ந்த `சுகந்த் இறுதி சடங்கு மேலாண்மை’ என்ற தனியார் நிறுவனம். டெல்லியில் நடக்கும் வர்த்தக கண்காட்சியில் இந்த நிறுவனத்தின் ஸ்டாலில் இறந்தவர்களின் உடலை வைப்பதற்கான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கட்டைகளை (பாடை) வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள்.
funeral procession, all included in the package. Infact, his ashes would get immersed in whichever river he desired. This new startup has already earned Rs 50 lakh profit so far and is expecting a turnover of Rs 2000 crores in the near future. (2/2)
— Diksha Yadav (@DikshaY62646349) November 20, 2022
இறுதிச் சடங்குக்கான வேலைகளை ஒரு பேக்கேஜ் கட்டணமாக நிர்ணயித்திருக்கிறது இந்த நிறுவனம். அதன்படி, இறுதிச் சடங்கு செய்வதற்கான பண்டிதர்கள், முடி திருத்தம் செய்பவர், இறந்தவர்களை தூக்குவோர், சடலத்துடன் நடப்பவர், மந்திரங்களை ஓதுவர் போன்றவை செய்யப்படும்.
இதுபோக, இறந்தவரின் அஸ்தியை அவர் விருப்பப்படி எங்கு கரைக்க வேண்டுமே அங்கேயே கொண்டுச் சென்று இந்த நிறுவனமே கரைத்து விடுமாம். இந்த வேலைகள் அனைத்துக்கும் சேர்த்து ஒரு இறுதிச் சடங்குக்கு 38,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறதாம் அந்த சுகந்த் நிறுவனம்.
Startup for funeral service.
A lot of opportunities are there in India to earn. pic.twitter.com/twV9X8KahK
— ಬುಳ್ಳ ಬ್ಲೂಟಿಕ್ (@leotheeagle) November 17, 2022
ஏற்கெனவே 5,000 இறுதிச் சடங்குகளை செய்து முடித்து கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்த்துள்ள இந்த நிறுவனம், எதிர்காலத்தில் 2,000 கோடி ரூபாய் வருமானத்தை எட்டும் அளவுக்கு இலக்கும் நிர்ணயித்திருக்கிறதாம்.
இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவதோடு, நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும் ஒரு சிலர் ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்கள். அதில், “வெளிநாடுகளில் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு இது புதிதாக இருப்பதால் வியப்படைகிறார்கள்” என்றும், “முதலாளித்துவத்தின் உச்சம்” என்றும், “எல்லாவற்றிலும் கார்ப்பரேட்களின் பங்கு இருப்பது போல, விரைவில் இறுதிச் சடங்குகளுக்கும் கார்ப்பரேட்களிடம் நிற்க வேண்டிய சூழல் விரைவில் எழலாம்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
As the time lapses,Parent realise that they made their kids successful in the world but failed to impart them basic ethos even to extent of exposing them as how to conduct last rites,As&When the final truth comes,these children r helpless n then comes Sukhant service with adv bkg pic.twitter.com/G4Jj7Rwwub
— Ankit Choudhary (@ankit_ch1998) November 21, 2022
As People are busy it’s a business idea for some one, soon we might see corporates entering into these fields with professional photographers,decorations etc
Shall we call this progress or it’s end of good olden days where people are bonded now it’s RIP culture in WhatsApp. https://t.co/2bfabs1q7J
— Ajay Reddy (@yngrblajay) November 22, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM