சமுர்த்தி பயனாளிகளுக்கு குறைந்த வட்டியில் 5 இலட்சம் ரூபா கடனுதவி

தற்பொழுது மாதாந்த கடன் வட்டி வீதம் சுமார் 24% ஆக இருந்தாலும், சமுர்த்தி வங்கியின் கீழ் வழங்கப்படும் கடன் வட்டி விகிதங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன,

இதனால் வாழ்வாதார மேம்பாட்டு கடன் வட்டி விகிதம் 10% – 15% க்கு இடையில் மட்டுமே என்று சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி பந்துல திலகசிறி தெரிவித்தார்.

சமுர்த்தி , சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு, விஷேட தேவைக்குட்பட்டோர் கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று  (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில்

பொதுவாக நுண்நிதி நிறுவனங்களின் கடன் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும், ஆனால் இந்த நுண்கடன் வங்கி முறையின் வட்டி விகிதம் குறைந்த பெறுமதி யில் சிறப்புக் கடன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, தலா 05 லட்சம் ரூபாவரையில்கடனாகப் பெறலாம் எனவும் தெரிவித்தார்.

Sayanthiny Kanthasamy

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.