சீன ஆலையில் பயங்கர தீ விபத்து: 38 பேர் பலி| Dinamalar

சீனாவில் ஒரு தொழிற்சாலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ௩௮ பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.

நம் அண்டை நாடான சீனாவின் ஹெனான் மாகாணம், வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று முன் தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ௬௩ தீயணைக்கும் வாகனங்களுடன் வந்த ௨௪௦ வீரர்கள், நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருந்தும் இந்த விபத்தில் ௩௮ பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

போலீசார் வழக்குப் பதிந்து சந்தேகத்துக்கு இடமான சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ௨௦௧௫ல் சீனாவின் டியான்ஜின் துறைமுகத்தில் ௭௦௦ டன் ‘சோடியம் சயனைடு’ வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ௧௭௦ பேர் பலியாகினர்; ௭௦௦ பேர் காயமடைந்தனர்.

அஜாக்கிரதை காரணமாக சீனாவில் உள்ள தொழிற்சாலைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.