தமிழக அரசுக்கு எதிராக புகார் கடிதம் வாசித்த எடப்பாடி பழனிசாமி: ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார்?

தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர்

, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர்.

சந்திப்பின் போது தமிழக அரசு மீதான பல்வேறு புகார்களை 19 பக்கங்களுக்கு மனுவாக ஆளுநரிடம் வழங்கியுள்ளனர்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் குண்டுவெடிப்பு நடந்திருந்தால் பாதிப்பு அதிகமாயிருக்கும். பல பேர் உயிரிழக்க நேரிட்டிருக்கும். தீவிரவாதம் என்றாலே உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். உளவுத்துறை முன்கூட்டியே தெரிந்து இந்த குண்டுவெடிப்பைத் தடுத்திருக்கலாம். திமுக அரசு ஒரு திறமையற்ற அரசு.

செயலற்று போனதா உளவுத்துறை?

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி சம்பவத்தில் முன்கூட்டியே விசாரணை நடைபெற்றிருந்தால் வன்முறை, கலவரம் ஏற்பட்டிருக்காது. அதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.

மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தல் சாதாரணமாக இங்கு நடக்கிறது.

“ஓபிஎஸ் – இபிஎஸ் இணைய வேண்டும்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

மருந்து தட்டுப்பாடு!

திமுக ஆட்சியில் தற்போது மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்பதை அமைச்சரே ஒத்துக்கொண்டுள்ளார். மருந்து கொள்முதலில் ஊழல் நடந்து வருகிறது. காலாவதி மருந்தும் பயன்பாட்டில் உள்ளது. இன்று உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை திமுக அரசு பறித்துவிட்டது.

தலைதூக்கும் ஊழல் புகார்!

இதுமட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திமுக அரசு என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான். ‘நம்ம ஊரு சூப்பரு’ விளம்பர பேனரில் மெகா ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 350 மதிப்புள்ள ஒரு பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்வதாக கணக்கு காட்டியுள்ளனர். பணி செய்வதற்கு முன்னரே, திமுக அரசு நிதி வழங்கி விடுகிறது. இதுவே திமுக ஊழலுக்கு உதாரணம்.

டெண்டர் இல்லாமல் பார் நடத்துதல், 24 மணி நேரமும் மது விற்பனை என டாஸ்மாக்கிலும் மெகா முறைகேடு நடந்து வருகிறது.

தமிழக அரசின் மீதான இந்த புகார்களை ஆளுநரிடம் மனுவாக வழங்கியுள்ளோம்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.