புதுடெல்லி: பீகாரில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.100 கோடி கருப்பு பணம் சிக்கியுள்ளது. ரியல் எஸ்டேட், வைர நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பீகாரைச் சேர்ந்த சில வணிகக் குழுக்களுக்கு, பீகார், உபி, டெல்லியில் உள்ள 30 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 17ம் தேதி ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.5 கோடி மதிப்புள்ள பணம், நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 14 வங்கி லாக்கர்கள் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்த இடங்களில் கணக்கில் காட்டப்படாத ரூ.12 கோடி ரொக்கமும், சட்ட விரோதமாக ரூ.80 கோடி பரிவர்த்தவனை செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளது,’ என்று கூறியுள்ளது.