புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு| Dinamalar

புதுச்சேரி: பார்லிமென்ட் தேர்தலுக்காக எடுக்கப்பட்ட வாகனங்களுக்கு வாடகை செலுத்தாததால் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல்துறை மற்றும் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலுக்காக, தலைமை தேர்தல் துறையானது 200 வாகனங்களை வாடகைக்கு எடுத்தது. முதலில் பாதி வாடகையை செலுத்திய தேர்தல்துறை, பின்னர் மீதி தொகையை தர பல நிபந்தனைகளை விதித்தது. இதற்கான ஆவணங்களை சமர்பித்தும் 80 லட்சம் ரூபாய் பாக்கி வைத்ததால், புதுச்சேரி நீதிமன்றத்தில் டிராவல்ஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு அலுவலகத்தையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, கலெக்டர் அலுவலகம் மற்றும் தேர்தல்துறை அலுவலக கட்டடங்களில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வரும் 30ம் தேதி மறுவிசாரணையில் ஆஜராகி தேர்தல்துறை முடிவை தெரிவிக்காவிட்டால், அந்த கட்டடங்களை ஏலம் விட உத்தரவிடும் முழு அதிகாரமும் நீதிமன்றத்துக்கு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.