மீண்டும் உதயநிதி வந்தாச்சு… திமுக தலைமை வெளியிட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல்!

திமுக தலைமை இன்று (நவம்பர் 23) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளைஞரணி அணி செயலாளராக

மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக ந.ரகுபதி என்கிற இன்பா, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமினம் செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞரணி வரலாறு

60களில் மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு வர தயாராகி கொண்டிருந்தார். அப்போது ”கோபாலபுரம் இளைஞர் திமுக” என்ற அமைப்பை உருவாக்கி களப்பணி மேற்கொண்டு வந்தார். ஆனால் கட்சி விதிகளின் படி உருவாக்கப்பட்ட அமைப்பாக இல்லை. பின்னர் 1980ல் மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி முறைப்படி உருவாக்கப்பட்டது. ஓராண்டு கழித்து 7 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவராக தான் மு.க.ஸ்டாலின் இருந்தார்.

பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞரணி உருவாக்கப்பட்டது. 1983ல் தான் திமுக இளைஞரணியின் மாநில செயலாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 30 ஆண்டுகளாக ஸ்டாலினே செயலாளராக இருந்து வந்தார். அதன்பிறகு வெள்ளக்கோவில் சாமிநாதன் கைகளுக்கு பதவி செல்ல 2019ல் உதயநிதி வசமானது. இவரது வருகையால் திமுக இளைஞரணி ஊடக கவனம் பெறத் தொடங்கியது.

திமுக ஆட்சி உதயம்

டிஜிட்டல் தளத்தில் மிகவும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தனர். குறிப்பாக 2021ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் இளைஞரணியின் செயல்பாடுகள் வேகமெடுத்தன. திராவிட மாடல் குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு கட்சி பணியாற்றி வருகின்றனர்.

2021 தேர்தலில் வென்று எம்.எல்.ஏவாக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதால் தனது தொகுதியின் வளர்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கினார். மேலும் கட்சியிலும் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி தான் என்ற அளவிற்கு வளர்ந்தார். சட்டமன்ற கூட்டத்தொடர்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும், கட்சிக் கூட்டங்கள், மாநாடுகளிலும் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதை பார்க்க முடிகிறது.

மூத்த அமைச்சர்கள் கூட உதயநிதிக்கு மரியாதை அளிக்கத் தொடங்கினர். சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கட்சியின் இளைஞரணி மற்றும் மகளிரணி ஆகியவற்றுக்கு நிர்வாகிகள் நியமனத்தில் தற்போது முடிவெடிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீண்டும் உதயநிதி இளைஞரணி தலைமை பொறுப்பை அலங்கரித்திருக்கிறார்.

மகளிர் அணி நிர்வாகிகள்

திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், மாநில மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் அணி துணைச் செயலாளர்கள் பவானி ராஜேந்திரன், மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி, மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்களாக சத்யா பழனிகுமார், ரேகா பிரியதர்ஷினி, விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ் ஆகியோரும், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்களாக சேலம் சுஜாதா, கே.ராணி ரவிச்சந்திரன், அமலு, மாலதி நாராயணசாமி, மோ.தேன்மொழி, செ.உமா மகேஸ்வரி, ஜெ.ஜெசிபொன்ராணி ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.