வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள், முதன்முதலாக தனது மகளுடன் பொதுநிகழ்ச்சிக்கு வந்தார்… நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் விதமாக இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அணு ஆயுதம் கொண்ட நாட்டின், மிகப்பெரிய ஏவுகணை ஏவப்படுவதற்கு முன்பு, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், தனது மகளின் முதல் படத்தை சனிக்கிழமையன்று (நவம்பர் 19) பகிரங்கப்படுத்தினார். கிம்மின் மகளின் இருப்பு, இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதால் அனைவருக்கும் இது ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்தது.
மகளுடன் புகைப்படங்களில் தோன்றிய கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன் தனது மகளுடன் முதல் முறையாக நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்தார். இது வட கொரியாவிற்கான தனது வம்சப் பார்வையின் தெளிவான குறிப்பை அளிப்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கிம், “தனது அன்பு மகள் மற்றும் மனைவியுடன்” கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதை வடகொரியா அதிபர் மேற்பார்வையிட்டதாக KCNA செய்தி நிறுவனம்தெரிவித்துள்ளது.
கிம்மின் குழந்தைகள் பற்றி இதுவரை எந்த செய்தியும் வந்ததில்லை
இந்த சந்தர்ப்பத்திற்கு முன்னதாக, கிம், அவரது குழந்தைகளைப் பற்றியோ அல்லது அவர்களின் இருப்பைப் பற்றியோ பேசியதில்லை. முன்னாள் NBA நட்சத்திரம் டென்னிஸ் ரோட்மேனிடமிருந்து மட்டுமே கிம் ஜாங் உன்னுக்கு குழந்தை இருப்பதை சொலியிருந்தர். 2013 இல் வட கொரியாவிற்குச் சென்றிருந்த அவர், கிம்மின் மகள் என்று அழைக்கப்பட்ட ஜூ ஏ என்ற குழந்தையை சந்தித்ததாகக் கூறினார்.
மேலும் படிக்க | கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்! மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியது வட கொரியா
படங்களில் உள்ள பெண் கிம்மின் இரண்டாவது குழந்தையா?
சிறுமி ஜு ஏ, கிம்மின் இரண்டாவது குழந்தை என்று நம்புவதாக, தென் கொரியாவில் உள்ள செஜோங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள வட கொரியா ஆய்வுகளுக்கான மையத்தில் பணிபுரியும் சியோங்-சாங் AFP இடம் கூறினார். ஜூ ஏ, வட கொரியாவில், “இளவரசி” க்கு சமமானவராகக் கருதப்படுகிறார்.
ஜூ ஏ, கிம்மின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசா?
தனது குழந்தையை அடுத்த வாரிசு என அறிவிப்பதற்கான அறிகுறியாக இந்த அறிமுகம் இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். இதில் வேடிக்கையான உண்மை என்னவென்றால், கிம் ஜாங் உன்னுக்கு மூத்த சகோதரர் இருந்தபோதிலும், கிம்மின் தந்தை கிம் ஜாங் இல், கிம் ஜாங் உன், தனது வாரிசு என்று அறிவித்தார். ஏனெனில் கிம் ஜாங் உன், அவரை மிகவும் ஒத்திருந்தார் என்று சியோங்-சாங் கருதுகிறார்.
மேலும் படிக்க | பத்து நாட்களில் ஐந்தாவது ஏவுகணை பரிசோதனை: அமெரிக்காவுக்கு சவால் விடும் வட கொரியா
கிம் ‘இயல்பான’ குடும்பத் தலைவராக சித்தரிக்கும் முயற்சி?
கிம் ஒரு “குடும்ப” தலைவர் என்பதைக் காட்ட பியோங்யாங் இந்த தந்திரத்தை மேற்கொண்டிருக்கலாம் என்றும் பல நிபுணர்கள் நம்புகின்றனர். “கிம், ஒரு போர்வெறி அல்லது நாசீசிஸ்டிக் லிட்டில் ராக்கெட் மேன் அல்ல. அவர் ஒரு நல்ல அப்பா, அவர் தேசத்தைப் பாதுகாப்பதைப் போல தனது குடும்பத்தைப் பாதுகாக்கிறார்” என்று வட கொரியா நிபுணர் ஜான் டெலூரி ட்விட்டரில் எழுதியுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகிற்கு ஒரு செய்தியா?
இந்த நேரத்தில் கிம்மின் மகளை உலகுக்குக் காட்டுவது வட கொரிய ஆட்சியின் பாரம்பரியம் தொடர்கிறது என்பதை உலகுக்குச் சொல்லும் செய்தியாக இருக்கலாம் என ஆய்வாளர் சூ கிம், AFPயிடம் தெரிவித்தார். “ஒரு வகையில், கிம் அடுத்த தலைமுறைக்கு ஆட்சியின் அதிகாரத்தை கடத்தியதற்கான அடையாளப் படம் இது,” என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததே இல்லை: வடகொரியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ