வெளிநாட்டில் உயிரிழந்த தந்தையின் கல்லறையை தேடி சென்ற தமிழர்! கண்ட காட்சியால் தாரை தாரையாக கண்ணீர்


வெளிநாட்டில் 55 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த தந்தையின் கல்லறையை தேடி சென்று தமிழர் ஒருவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மலேசியாவில் வேலை

தமிழகத்தின் தென்காசியில் உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன். இவர் சமூக ஆர்வலர் ஆவார்.
இவரது தந்தை பூங்குன்றன் என்ற ராமசுந்தரம்.தாயார் ராதாபாய்.

இவர்கள் மலேசியா நாட்டில் ஆசிரியர்களாக வேலை பார்த்தனர். கடந்த 1967-ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக ராமசுந்தரம் இறந்துவிட்டார். அப்போது திருமாறன் பிறந்து 6 மாதங்களே ஆகியிருந்தது. இதனால் அவரது தாயார், கணவரின் உடலை மலேசியாவிலேயே அடக்கம் செய்து விட்டு மகனை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார்.

திருமாறன்

தந்தை கல்லறையை தேடி வெளிநாடு பயணம்

இங்கு வந்த சில ஆண்டுகளிலேயே ராதாபாயும் இறந்து விட்டார்.
இதையடுத்து மலேசியாவில் தனது பெற்றோர் தங்கி இருந்த பகுதியை கூகுளில் தேடி கண்டுபிடித்தார்.

தனது தந்தை ஆசிரியராக இருந்தபோது அவரிடம் படித்த மாணவர்கள் விவரத்தை திரட்டி அதன் மூலம் மலேசியாவுக்கு சென்று ராமசுந்தரம் கல்லறையை கண்டுபிடித்தார்.

அங்கு ஒரு புதருக்குள் இருந்த கல்லறையில் தனது தந்தையின் பிறப்பு, இறப்பு பற்றிய விவரங்கள் இருந்ததை பார்த்து திருமாறன் தாரை தாரையாக கண்ணீர் விட்டார். புதர்மண்டி கிடந்த அந்த கல்லறையை சுத்தப்படுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.