”ஆர்கானிக் Pad-களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்” – மாதவிடாய் குறித்த ஆய்வில் பகீர் தகவல்!

இந்தியாவில் பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களில் இதயக்குறைபாடுகள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற தீவிர பிரச்னைகளை ஏற்படுத்தும் ரசாயனங்களை கொண்டிருப்பதாக தன்னார்வு அமைப்பு செய்த ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற தன்னார்வ அமைப்பு செய்த அந்த ஆய்வில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 10 சாம்பிள்களில் (6 கனிமமற்ற மற்றும் 4 கனிமங்கள் நிறைந்த சானிட்டரி நாப்கின்கள்) phthalates and volatile ரசாயனங்கள் இருந்தது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை, `மென்சுரல் வேஸ்ட் 2022’ (மாதவிடாய்க்கால கழிவுகள் 2022) என்ற பெயரில் வெளிவந்துள்ளன.
image
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் phthalates, உடலில் சேர்கையில் நாளமில்லா சுரப்பிகளை சீரற்று போகச்செய்வது, இதயம் மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவது, சில புற்றுநோய்கள், பிறவிக்குறைபாடுகள் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. volatile ரசாயனங்கள் (VOC) என்பவை, மூளை குறைபாடு, ஆஸ்துமா, உடலுறுப்பு செயலிழப்புகள், புற்றுநோய்கள், இனப்பெருக்க செயல்பாடுகளை மந்தச்செய்வது என பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
இவற்றில் phthalates, `இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்’ என தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் நாப்கன்களில்தான் அதிகமிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வி.ஓ.சி-யும் மிக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின் வகைகளில் தான் அதிகமிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது Organic pads மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
image
பொதுவாக மாதவிடாய் காலத்தை பாதுகாப்பாக கடக்க இந்திய பெண்கள், மென்சுரல் கப் – டேம்பான்ஸ் – துணியால் செய்யப்பட்ட நாப்கின்களை விடவும் சந்தையிலுள்ள நாப்கின்களையே பயன்படுத்துவர். அப்படியிருக்கையில், அது பாதுகாப்பாக இல்லாமல் இருப்பதென்பது, அதுமீதான கேள்விகளை அதிகரித்துள்ளது. பெண்கள் தங்களின் வாழ்நாளில் சுமார் 1,800 நாள்கள் மாதவிடாய் நாள்களில்தான் உள்ளனர். அப்படியிருக்க, அதுவும் பாதுகாப்பாக இல்லையென்பது, அதிர்ச்சியையும் கொடுக்கிறது.
இதுபோன்ற ரசாயன நாப்கின்களுக்கு மாற்றாக, வேறு இயற்கை நாப்கின்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் அதை கண்காணிக்கவும் அரசு சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்பதே மகளிர் நல மருத்துவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.