ஒரு வயது குழந்தைக்கு தவறான சிகிச்சையா? அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

மதுரை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவரது ஒரு வயது ஆண் குழந்தைக்கு, நாக்கு உள்ள இடத்தில் சதை துண்டு போல் தொண்டைக்குள் இருந்தது. இப்பிரச்னை குறித்து தனது மகனுக்கு  மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். இதில், தொண்டையில் இருந்த அந்த சதை பகுதியை நரம்பு மூலம் இழுத்து கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு தனது மகனை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கடந்த 21ம் தேதி கொண்டு வந்தார்.

235வது வார்டில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு நாக்கு பகுதிக்கு பதிலாக சிறுநீரக பகுதியில் ஆபரேஷன் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக, குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரை அரசு மருத்துமவனை டீன் ரத்தினவேலிடம் கேட்ட போது, ‘‘நாக்கு பகுதிக்கான அறுவை சிகிச்சைக்கு வந்த குழந்தையை பரிசோதித்தபோது, விரிந்த சிறுநீர் பை கோளாறு கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையும் தரப்பட்டது. மாற்றி வேறு சிகிச்சை ஏதும் தரப்படவில்லை. இதில் தவறு ஏதும் நடக்கவில்லை’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.