கனடாவில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய குடும்பம்
ஒன்றாறியோ பொலிசார் இது தொடர்பில் கூறுகையில், Peterboroughல் SUV வகை காரும், மினி லொறியும் செவ்வாய்கிழமை இரவில் ஒரு வாகனம் மீது மற்றொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த நிலையில், 14 வயது சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர்.
GOFUNDME
உயிருக்கு போராடும் சிறுமி
Jonathan MacDonnell (46), Stephanie Hart (52) மற்றும் Riddick Hart (18) ஆகியோர் உயிரிழந்தவர்கள் ஆவார்கள்.
Rowghan Hart (14) மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
GoFundMe இணைய பக்கம் மூலம் Rowghan சிகிச்சைக்கு நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரையில் $24,000க்கும் அதிகமாக பணம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மினி லொறியை ஓட்டி வந்த ஓட்டுனர் பெயர் Jason Schmidt of Hastings (42) என தெரியவந்துள்ள நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.