சமந்தா மருத்துவமனையில் அனுமதி உண்மையா….

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளார். கணவர் நாகசைதன்யாவை பிரிந்த பின்பு நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான யசோதா படம் வரவேற்பை பெற்றது.

நடிகை சமந்தா ‛மயோடிசிஸ்' எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். யசோதா படம் வெளியான சமயத்தில் கூட அந்தபடம் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தான் எழுந்து கூட நடக்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டதாக கண்ணீர் மல்க கூறினார். அதேசமயம் இந்த நோயிலிருந்து சீக்கிரம் குணமாகி வருவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ‛மயோடிசிஸ்' நோய் பிரச்னையால் தான் அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை, நலமாக உள்ளார் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் என சமந்தாவிற்கு நெருக்கமானவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.