தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழுந்தது. வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக,
இன்று வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடை மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25/11/2022 முதல் 28/11/2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.