தென்காசியில், காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் மோதிய விபத்தில் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் அதிகமான அளவில் சரல் மண் வெட்டி எடுத்து தென்காசி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கு சொந்தமான எஸ்பிஎன் சேம்பர் குவாரிக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், அவ்வாறு மணல் ஏற்றிச் சென்ற எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ராஜதுரை என்பவரின் மகன் ராஜமுகன் என்ற 4 வயது சிறுவன் மீது ஏறி இறங்கியது. இதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சுரண்டை காவல் துறையினர் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.