நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பட்டறை மேடு பகுதியில் உள்ள கோல்டன் பஞ்சாபி தாபாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தந்தூரி அடுப்பில் இருந்து மளமளவென பரவிய தீயால் ஓட்டலின் கட்டடங்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு சென்ற திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.