சென்னை : போலி பில் போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை பதிவாளர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். மேலும், முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ரேசன் கடைகளில் பொருள்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.