FIFA WC 2022-ஐ தமிழக அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சி சேனலை அரசு கேபிள் டியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.


— Mano Thangaraj (@Manothangaraj) November 24, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.