டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த போலி சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் போலி ஆவணங்களைக் காட்டி சதி வேலையில் ஈடுபட்டபோது சிக்கினார்.
ஆன்லைன் வழியாக அறையை முன்பதிவு செய்து தமிழ்நாடு அரசு இல்லத்தில் மோசடி நபர் தங்கியது தெரியவந்துள்ளது.
ஆதார் அடையாள அட்டை, சிபிஐயில் பணியாற்றுவதற்கான அட்டை போன்றவற்றை போலியாக தயார் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.