பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் மொத்த ராஜகுடும்பத்தையும் அவமதித்தார்.
ஆனால், ராஜ குடும்ப மூத்த உறுப்பினர் ஒருவர், நீ விரும்பினால் இளவரசியான பிறகும் நடிக்கலாம் என்று கூட மேகனிடம் கூறினாராம்.
அந்த உறுப்பினர் வேறு யாருமில்லை, சாட்சாத் மகாராணியாரேதான்!
ராஜ குடும்பம் குறித்து வெளிவரும் புதிய தகவல்கள்
Gyles Brandreth, Elizabeth: An Intimate Portrait என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. அதில் அவர் இதுவரை வெளியில் வராத பல விடயங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒன்று, மகாராணியார் தனது கடைசி நாட்களில் புற்றுநோயுடன் போராடியது.
மேகன் மீது மகாராணியார் வைத்திருந்த அன்பு
இளவரசர் ஹரி மகாராணியாரின் செல்லப்பேரன் என்பதை உலகமே அறியும். அத்துடன், தன் குடும்பத்தினர் மீது அவர் வைத்திருந்த பாசமும் அளவு கடந்தது. தனது மகன் ஆண்ட்ரூவால் ராஜ குடும்பத்துக்கு அவமானம் வந்தபோது, ஒரு மகாராணியாக அவர் மீது நடவடிக்கை எடுத்தாலும், ஒரு தாயாக அவரை அவர் விட்டுக்கொடுக்கவேயில்லை.
அதேபோல, தன் செல்லப்பேரன் ஹரி கொடுத்த பேட்டி குறித்து கூட அவர் அதிகம் கவலைப்படவில்லையாம்.
image – AP
அதுபற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள Gyles Brandreth, மேகன் குறித்த ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார். அதாவது, மேகன் ஹரியைத் திருமணம் செய்து அவர் இளவரசி ஆனபிறகும், மேகனுக்கு விருப்பமானால், அவர் தொடர்ந்து நடிக்கலாம் என்று கூட கூறினாராம் மகாராணியார்.
நீ விரும்பினால் தொடர்ந்து நடிக்கலாம் என்று மேகனிடம் கூறிய மகாராணியார், அது உன் தொழில்தானே, நீ விரும்பினால் உன் தொழிலை தொடரலாம் என்றாராம்.
ஆனால், தான் நடிப்பதை நிறுத்திவிட்டு ராஜ குடும்ப சேவை செய்ய விரும்புவதாக மேகன் கூற, பெருமகிழ்ச்சி அடைந்தாராம் மகாராணியார்.