காத்மாண்டு : நம் அண்டை நாடான நேபாளத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் ஆளுங்கட்சியான நேபாள காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்ட் மற்றும் 550 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபை தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதில் பார்லி.,க்கு165 எம்.பி.,க்கள் நேரடி தேர்தல் வாயிலாகவும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுன்றனர்.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஒரு வாரமாக எண்ணப்பட்டு, அவ்வப்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் ஷெர் பகதுார் தலைமையிலான ஆளும் நேபாள காங்கிரஸ், 53 பார்லிமென்ட் தொகுதிகளில் வெற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அந்த கட்சி தலைமையிலான கூட்டணி, 85 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணி 55 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் சில தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது.
ஆட்சி அமைக்க, 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த எண்ணிக்கை இன்னும் எந்த கூட்டணிக்கும் கிடைக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement