பசுமை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொது போக்குவரத்து கொள்கைக்காக அரசு செயல்பட்டு வருவதாக வெகு ஜன ஊடக அமைச்சரும் போக்குவரத்து ,நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கமைவாக பசுமை சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான மின்சார ரெயில் ,மின்சார வாகனம் ஆகியவற்றை கூடுதலாக போக்குவரத்து கட்டமைப்பில் ஒன்றிணைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
போக்குவரத்து துறையில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ,திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த திட்டங்களை விரைவாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.