மத்திய பிரதேசம் : இந்தியா முழுவதும் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது 82-வது நாள் பயணத்தை மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து வருகிறார். ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியத்தை அடுத்து தற்போது மத்திய பிரதேசத்தில் ராகுல் நடைபயணம் செய்கிறார்.
82-வது நாளான இன்று இந்தூரில் உள்ள கணபதி சதுகத்தில் இருந்து ஒற்றுமை பயணத்தை அவர் தொடங்கினார். அவருடன் நூறுக்கணக்கான தொண்டர்கள் மூவண்ண கோடி ஏந்தி பேரணியாக நடந்து வருகின்றன. அப்போது சைக்கிள் வீரர்கள் சிலர் ராகுல் பயணத்தில் பங்கேற்ற போது வீரர் ஒருவரின் சைக்கிளை ராகுல் சிறிது தூரம் ஒட்டி சென்றார். மத்திய பிரதேச மாநிலத்தில் 380 கி.மீ தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். 150 நாட்களில் 3570 கி.மீ பயணிக்கும் ராகுல் காந்தி காஷ்மீரில் தனது நடைப்பயணத்தை நிறைவு செய்கிறார்.