ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும். குறிப்பாக வட தமிழகத்திற்கு அதிகப்படியான மழைப்பொழிவை அளிக்கும். ஆனால் நடப்பாண்டு இருமுறை பருவமழை தீவிரம் காட்டிய நிலையில், அதன்பிறகு மழையை காண முடியவில்லை. இந்திய வானிலை மையம், சென்னை வானிலை ஆய்வு மையம், தனியார் வானிலை ஆய்வாளர்கள் எனப் பலரும் மழை தொடர்பான தகவல்கள் பகிர்ந்து வருகின்றனர்.
வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்த சூழலில் வட தமிழகத்தில் சில்லென்ற வானிலை மட்டுமே காணப்படுகிறது. மழை பெய்வதற்கான அறிகுறி சிறிதும் காணப்படவில்லை. அதேசமயம் மேற்கு மண்டலத்தில் நல்ல மழை பெய்திருப்பதை பார்க்க முடிகிறது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைப்பொழிவு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,
அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் 12 செ.மீ மழை பெய்துள்ளது.கோவை மாவட்டம் மக்கினாம்பட்டி, ஈரோடு மாவட்ட குண்டேரிபள்ளம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ மழை பெய்துள்ளது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பெய்திருக்கிறது.கன்னியாகுமரி மாவட்டம் கீழ் கோதையாறு, தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், நீலகிரி மாவட்டம் குன்னூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூர், நீலகிரி மாவட்டம் ஆலக்கரை, சேலம் மாவட்டம் ஆத்தூர், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், கன்னியாகுமரி மாவட்ட சுரளகோடு, மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணை அணை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், சேலம் மாவட்டம் கெங்கவல்லி, நீலகிரி மாவட்டம் குன்னூர், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணை, தேனி மாவட்டம் பெரியாறு, சேலம் மாவட்டம் சங்கரிதுர்க், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கோவை மாவட்டம் ஆழியாறு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நீலகிரி மாவட்டம் பில்லிமலை, விருதுநகர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பெய்திருக்கிறது.தேனி மாவட்டம் பெரியகுளம், கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.
இதன்மூலம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருவது தெரியவருகிறது. அடுத்தகட்டமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.