விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை நடைபெற்ற எவிக்ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் 6வது சீசனில் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக மக்களால் முதலில் பார்க்கப்பட்டவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். ஆனால் அவரோ விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதை விட நடிகை ரச்சிதா பின்பு சுற்றுவதையே முக்கிய வேலையாக பார்த்துள்ளார். இதுவே அவர் எலிமிநேட் ஆனதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
மேலும் ராபர்ட் மாஸ்டர் எப்போது பார்த்தாலும் எங்காவது உட்கார்ந்து கொண்டு ரச்சிதா பற்றிப் பேசிக்கொண்டு இருப்பது, அவரை ரசிப்பது, வழிந்து பேசுவதே என்று இருந்து கொண்டு வந்தது ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டி வந்தது.
இந்த நிலையில் சென்ற வாரம் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டவர்களிலிருந்து குறைவான வாக்குகளைப் பெற்ற ராபர்ட் மாஸ்டரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது, அதன்படி ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தற்போதைக்கு தெரியவில்லை.
அந்தவகையில் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக 6 வாரங்கள் இருந்த நிலையில் அவர் 12 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்று இருப்பார் என கூறப்படுகிறது.
இதனிடையே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் முதலில் அசல் கோளாரை சந்தித்துள்ளார். இவர்களின் புகைப்படம் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.