உலகின் பாரிய கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
Mein Schiff 5 என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளது.
குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நங்கூரமிட்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கப்பலில் 2030 வெளிநாட்டு பயணிகளும் 945 பணியாளர்களும் உள்ளனர் என்றும் பெரும்பாலான பயணிகள் ஐரோப்பியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சுற்றுலா பயணிகளை இறக்கிய பின் இங்கிருந்து 30ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்று அங்கிருந்து சுற்றுலா பயணிகளுடன் நாட்டை விட்டு வெளியேறும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பாரிய பயணிகள் கப்பல் ஒன்று அதிக நேரம் தரித்து நின்ற முதல் சந்தர்ப்பமாக இது பதிவாகவுள்ளது.