கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை நிகழ்ச்சியின் நடுவர் நாகரீகமற்றது என்று விமர்சித்துள்ளார்.
நிறைவு விழாவில் பேசிய திரைப்பட விழா தலைமை நடுவரான இஸ்ரேல் திரைப்பட இயக்குநர் நாதவ் லபிட், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை திரையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இது பிரசாரம் செய்யும் வகையிலானது மற்றும் நாகரீகமற்ற திரைப்படம் என்றும் விமர்சித்தார். இதனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறினார்.
இதுபோன்ற திருவிழாவில் இந்தப் படத்தை திரையிடுவது பொருத்தமானதாக இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது என்பது கலை மற்றும் வாழ்க்கையில் அவசியமானது என்பதால், தனது கருத்தை வெளிப்படுத்துவதாகவும் நாதவ் லபிட் கூறினார்.
newstm.in