கோட்டாபய நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கும் காரணம் இதுவே! வெளிப்படுத்தினார் மைத்திரி


தமக்கும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும், ஆயுதப் படைகளால்
மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் ஒரே மாதிரியாக இருந்தன.

இதுவே தமது காலத்தில், உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் நடப்பதற்கும், கோட்டாபய, நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கும்
காரணமாக இருந்தது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிப்பால சிறிசேன
தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படைகள்
மத்தியில் மறுசீரமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக, இந்தக் கருத்தை
அவர், பாதுகாப்பு அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது
தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் 

கோட்டாபய நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கும் காரணம் இதுவே! வெளிப்படுத்தினார் மைத்திரி | Sri Lankan Political Crisis Anti Govt Protest

“புலனாய்வு அமைப்புகளால் தனக்கும், கோட்டாபயவுக்கும் தோல்வி ஏற்பட்டுள்ளதாக
அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு முன்னதாக, மூத்த அதிகாரிகள்
தமக்கிடையே தாக்குதல் நடத்தப்பட்ட தகவலைப் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால்
அவர்கள் அதை எந்த வகையிலும் ஜனாதிபதியாக இருந்த தமக்கு தெரிவிக்கவில்லை.” 

“ஜனாதிபதி கோட்டாபயவுக்கு என்ன நடந்தது?
அவர் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த நாளில், 25,000 முதல் 30,000
போராட்டக்காரர்கள் மட்டுமே கொழும்பில் குவிந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகள்
அவருக்குத் தெரிவித்தன. அதனால், அதனை கட்டுப்படுத்த முடியும் என்று
நம்பினார். ஆனால் 400,000 க்கும் மேற்பட்டோர் வந்தனர். அதை யாரும்
எதிர்பார்க்கவில்லை.

ஆயுதப் படைகளின் முழுமையான மறுசீரமைப்பு தேவை

கோட்டாபய நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கும் காரணம் இதுவே! வெளிப்படுத்தினார் மைத்திரி | Sri Lankan Political Crisis Anti Govt Protest

அதனால் என்ன நடந்தது? ஜனாதிபதி தப்பியோட வேண்டியதாயிற்று,
பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் தலைமறைவாக வேண்டியிருந்தது.”என்று மைத்ரிப்பால சிறிசேன
தெரிவித்துள்ளார்.

இரண்டு சம்பவங்களும் பாதுகாப்புக்கான, வரவு செலவுத் திட்டத்தில் பில்லியன்
கணக்கான நிதியை வழங்குவதற்குப் பதிலாக, ஆயுதப் படைகளின் முழுமையான
மறுசீரமைப்பு தேவை என்பதை காட்டுகின்றன என்றும் இதன்போது மைத்ரிப்பால சுட்டிக்காட்டியுள்ளார். 

May you like this Video




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.