
சென்னையில் இன்று முக்கிய இடங்களில் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரூர் பகுதியில், திருவேற்காடு குப்புசுவாமி நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர் சாலை பகுதியில், டி.ஐ.சைக்கிள் அம்பத்தூர் ஓ.டி, வெங்கடாபுரம், எம்.டி.எச்.ரோடு பகுதி, விஜயலட்சுமிபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in