அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியிருந்த இரு சுற்றறிக்கைகள் உடன் நடைமுறைக்கு வரும் கையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு இன்றைய தினம் அறிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் உடை
அதன்படி 2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரண்டு சுற்றறிக்கைகளையும் மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.