மூணாறு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளையொட்டி இடுக்கி அணையைக் காண இன்று(டிச.,1) முதல் ஜன.31 வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளன. இருஅணைகளிலுமாக சேர்ந்து தண்ணீர் தேங்கும். செருதோணி அணையில் தான் தண்ணீர் திறக்கும் ஷட்டர்கள் உள்ளன. மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.
ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் அணையைக் காண அனுமதிக்கப்பட்டுவர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி இன்று (டிச.1) முதல் ஜனவரி 31 வரை அணையைக் காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை அணையை ரசிக்கலாம்.
நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.40ம், சிறுவர்களுக்கு ரூ.20ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலைபேசி, கேமரா உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. வாரந்திர பராமரிப்பு பணிகளுக்காக புதன் கிழமை மட்டும் பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement