புதுடில்லி ‘ஹோண்டா கார்ஸ் இந்தியா’ நிறுவனம், வாடிக்கையாளர்கள் அதன் கார்களை, எளிமையான கார் நிதி திட்டங்கள் வாயிலாக வாங்குவதற்கு, ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு, மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அதிக கடன் வழங்குவதுடன், கடனை திருப்பி செலுத்த, அதிகபட்ச கால அளவை வழங்குவதற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டு முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement