வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரபல ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனருமான ஜாக் மா, அந்நாட்டு அரசின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 6 மாதங்களாக ஜப்பானில் வசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.அலிபாபா குழுமம், சீனாவின் மிகப் பெரிய வணிகங்களில் ஒன்றாகும். இதன் நிறுவனர் ஜாக் மா. உலகளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஜாக் மாவின் சொத்து மதிப்பு, தற்போது 2.52 லட்சம் கோடி ரூபாய்.கடந்த 2020ல், இவரது ‘ஆன்ட்’ குழுமம், 2.79 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கான முயற்சியில் இறங்கியது. ஆனால், கடைசி நேரத்தில் சீன அரசு தடை போட்டது.
![]() |
இதன் தொடர்ச்சியாக பல கட்டுப்பாடுகள், நெருக்கடிகள் அவரது நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு வந்ததை அடுத்து, பொதுவெளியில் தோன்று வதையும் குறைத்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக, அவர் ஜப்பானில் தன்னுடைய குடும்பத்தினருடன் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.ஜப்பானில் ஓவியங்கள் வரைவது, வாங்குவது, வெந்நீர் ஊற்றுகளில் குளியல் போடுவது ஆகிய பொழுதுபோக்குகளில் ஈடுபடு வருகிறார்.தன்னுடைய சமையல் கலைஞரையும் உடன் அழைத்து வந்திருக்கும் அவர், அவ்வப்போது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்தாலும், பெரும்பாலும் ஜப்பானில் தான் தங்கி
உள்ளார். அங்கேயும் பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வருகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement