தங்கவயலில் அரசு மருத்துவமனை புதிய கட்டடம் டிச., ௧௪ல் திறப்பு| Dinamalar

தங்கவயல்: ”தங்கவயல் அரசு மருத்துவமனையில் நவீன வசதியுடன் உருவாக்கப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா டிசம்பர் ௧௪ம் தேதி நடக்கிறது,” என, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

தங்கவயலில் நேற்று அவர் கூறியதாவது:

தங்கவயல் அரசு மருத்துவமனை, கோலார் மாவட்டத்தில் முதல் இடத்திலும், மாநில அளவில் ஏழாவது இடத்திலும் இருப்பதாக கர்நாடக அரசு மருத்துவத்துறை சான்றளித்துள்ளது. ஆரம்ப காலத்தில் 100 படுக்கைகள் இருந்தது. பின், 250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டது. தற்போது மாவட்டதகுதியுடன் 330 படுக்கைகள் உள்ளன.

இம்மருத்துவமனையில்8 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டட பணிகள் நிறைவு பெற்றுள்ளது.நவீன அவசர சிகிச்சை பிரிவில், காயங்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பிரிவு,விஷம் குடித்து உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சைக்கு தனிப் பிரிவு இடம் பெற்றுள்ளது. நவீன மருத்துவ பரிசோதனைக்கூடம் உள்ளது.

முன்பெல்லாம் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரு, கோலார், குப்பம் மருத்துவமனைக்கு அனுப்புவது வழக்கம். இனிமேல், தங்கவயல் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

இதய சிகிச்சைக்கு, தனி பிரிவு தேவை என கோரியிருக்கிறோம்.மருத்துவ பணியாளர் ஓய்வறை, நோயாளிகள் நடைபயிற்சிக்கு வசதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் கீழ் தளம், முதல், இரண்டாம் மாடிக்கு செல்ல நவீன லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி உள்ளோம்.

மருத்துவமனையின் புதிய கட்டடம், டிசம்பர் ௧௪ம் தேதி திறக்கப்படுகிறது. சுகாதார அமைச்சர் சுதாகர், கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனிரத்னா, கோலார் தொகுதி பா.ஜ., – எம்.பி., முனிசாமி, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, கலெக்டர் வெங்கட்ராஜு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.