பிரோசாபாத், உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார் உட்பட ஆறு பேர் பலியாகினர்; மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள பிரோசாபாத் நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் கீழ் தளத்தில் பர்னிச்சர் விற்கும் கடையும், மேல் தளத்தில் ஒரு குடும்பமும் இருந்துள்ளனர். நேற்று இந்தக் கடையில் திடீரென பற்றிய தீ மேல் தளத்திற்கும் பரவியதில், ஆறு பேர் பலியாகினர்; மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, 18 தீயணைப்பு வாகனங்களுடன், இரண்டரை மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
இது நெரிசலான பகுதி என்பதால் மீட்பு பணிக்கு கூடுதல் நேரமானது.
மின் கசிவின் காரணமாக இந்த விபத்து நடத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைக்குப்பின் போலீசார் தெரிவித்தனர்.
தீ விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement