காபூல், ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மதரசாவில், நேற்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், ௧௦ மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் இஸ்லாமிய மதக் கல்வி போதிக்கப்படும் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், ௧௦ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், இது ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடூரச் செயலாகத்தான் இருக்கவேண்டும் என, அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement