பாகல்கோட், :கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தியாமப்பா, 57. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றுக்குள் ரூபாய் நாணயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியாகினர்.
இது குறித்து டாக்டர் ஒருவர் தெரிவித்ததாவது:
மனநலம் பாதிக்கப்பட்ட தியாமப்பா, கடந்த சில நாட்களாக ரூபாய் நாணயங்களை விழுங்கி வந்திருக்கிறார். இதனால் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதனை செய்ததில், வயிற்றுக்குள் நிறைய நாணயங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்து 187 நாணயங்கள் எடுக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement