
ஸ்ரேயாவுக்கு காரை பரிசளித்த சித்து
சின்னத்திரை நடிகர்களான ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆன்ஸ்கீரினை போலவே ஆப் ஸ்கீரினிலும் இவர்களது கெமிஸ்ட்ரி ரொம்பவும் பிரபலம். சொல்லப்போனால் ரீலை விட ரியலில் இவர்கள் செய்யும் ரொமான்ஸ் மற்றும் குறும்புகளை பார்க்கவே சோஷியல் மீடியாவில் ஸ்ரேயா – சித்துவை பலரும் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடியுள்ள சித்து தனது காதல் மனைவி ஸ்ரேயாவுக்கு எஸ்யூவி வகையிலான சொகுசு காரை பரிசளித்து மகிழ்வித்துள்ளார்.