எஸ்.பி.வேலுமணி வழக்கை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என தமழக … Read more

தெலங்கானாவில் ஜனநாயகம் செத்துவிட்டது; ஜெகன் மோகனின் சகோதரி காட்டம்.!

தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற பெயரில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று, தலைநகர் ஐதராபாத்தில் உள்ள முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட, ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காரில் சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவரை … Read more

இந்திய கடற்படைக்கு சீனா வைத்த ஆப்பு; எச்சரிக்கை மணி அடித்த அமெரிக்கா.!

சீனா தனது விமானம் தாங்கி கப்பல்கள், பெரிய போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை, ஆப்பிரிக்காவின் கொம்பூ என அழைக்கப்படும் ஜிபூட்டியில் உள்ள தனது முதல் வெளிநாட்டு ராணுவ தளத்தில் நிறுத்தலாம், இது இந்திய கடற்படைக்கு மிகுந்த பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட சீனா பற்றிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வருடாந்திர அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது. இதுவே சீனாவின் சர்வதேச தாக்குதல் படைகளின் முதுகெலும்பாக இருக்கும் என அமெரிக்கா கணித்துள்ளது. மேலும் … Read more

விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவரின் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான 14 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி இந்த முன்னாள் இராணுவ அதிகாரி நேற்று முன்தினம் இரவு கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் கம்பஹா பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் வசித்து வரும் 42 வயதான முன்னாள் இராணுவ அதிகாரியே … Read more

FIFA உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர்கள்: தடைகளை உடைத்தெறிந்த பெண்மணிகள்

வியாழக்கிழமை நடைபெற உள்ள கோஸ்டாரிக்கா மற்றும் ஜேர்மன் இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டியில் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு படைக்கும் பெண்மணிகள் 2022ம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி கத்தார் அல் பேட் மைதானத்தில் நடைபெற உள்ள கோஸ்டாரிக்கா மற்றும் ஜேர்மன் இடையிலான போட்டியின் போது, முதல் முறையாக ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து வரலாற்றில்  ஸ்டெபானி ப்ராபாரட் என்ற பெண் நடுவராக செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  38 வயதாகும் பிரான்ஸ் நடுவர் … Read more

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் – சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு  உள்ளனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தின் சட்ட ஒழுங்க கூடுதல் டிஜிபியாக இருந்த தாமரைக்கண்ணன் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசு புதிய டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்ப்டடு உள்ளார். கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அசோக் குமார், சென்னை … Read more

சோழவந்தான் அருகே ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில், ஐயப்ப சுவாமிக்கு வைகையாற்றில்  ஆராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக தென்கரை ஐயப்பன் கோயிலில், பரசுராம் சிவாச்சாரியார்  தலைமையில் யாக பூஜை நடைபெற்றது. பின்னர் செண்டை மேளம் முழங்க, யானை மீது ஐயப்பன் ஊர்வலமாக வைகையாற்றுக்கு வந்தார். அங்கு ஐயப்பனுக்கு 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் ஐயப்ப பக்தர்கள் முன்னிலையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் சரண … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: பிரான்ஸ் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது துனிசியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு டி-யில் உள்ள பிரான்ஸ் – துனிசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி துனிசியா அணி வெற்றி பெற்றது.

ஆர்கானிக், குருணை அரிசிக்கு ஏற்றுமதி தடை நீக்கம்: விலை குறைந்ததை அடுத்து ஒன்றிய அரசு நடவடிக்கை..!

டெல்லி: பாஸ்மதி அல்லாத ஆர்கானிக் அரிசி வகைகள், குருணை அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உள்நாட்டு சில்லறை சந்தையில் பாஸ்மதி அல்லாத ஆர்கானிக் அரிசிகளின் விலை உயர்ந்ததால், உள்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க மேற்கண்ட அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், குருணை அரிசியின் உள்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க கடந்த செப்டம்பர் மாதம் அந்த அரசியின் ஏற்றுமதிக்கும் தடை … Read more

பிரியாணிக்கு தள்ளுமுள்ளு| Dinamalar

ஹூப்பள்ளி, : மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் புதிய அலுவலக திறப்பு விழாவில், பிரியாணி, கபாப் பெறுவதில் பலரும் ‘தள்ளுமுள்ளு’வில் ஈடுபட்டனர். ஹூப்பள்ளி மாநகராட்சி காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் டோரேராவ் மணி குண்டலாவின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. அலுவலகத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்பாய்யா பிரசாத் திறந்து வைத்தார். பல்வேறு மடாதிபதிகள், மேயர் ஈரேஷா, துணை மேயர் உமா மற்றும் காங்கிரசார் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரியாணி, கபாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பெறுவதற்கு … Read more