இந்த மழைக்கும் ஒரு இடத்துல கூட பவர் கட் இல்ல… அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்!

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை, கே.கே.நகர் துணை மின்நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு உள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு துணைமின் நிலையங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றி மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கவும், பாதுகாப்பாக பணியாற்றிடவும் அறிவுரை வழங்கினார்கள். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மின்சார துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த … Read more

உலகளவில் பிரதமர் மோடிக்கு ஏன் இவ்வளவு மரியாதை? – அசோக் கெலாட் விளக்கம்!

மகாத்மா காந்தியின் நாட்டை வழிநடத்துவதால், பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளவில் மரியாதை கிடைப்பதாக, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். 1913 ஆம் ஆண்டு நடந்த மங்கார் படுகொலையை நினைவுகூரும் வகையில், மங்கார் தம் கி கவுரவ் கதா என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா என்ற பகுதியில் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் … Read more

நாயை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் – சிக்கிய வீடியோ… பதறிய மக்கள்!

இந்தியாவில் விலங்குகளுக்கு எதிரான வன்முறை அதிகமாக காணப்படும் நிலையில், அதில் அதிகமாக பாதிக்கப்படுவது என்றால் ஆதரவற்று பொதுவெளியில் அலையும் தெருநாய்கள்தான். அந்த வகையில், மும்பையில் தெரு நாய்க்கு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மும்பையில் விலங்கு நல ஆர்வலர் கடந்த சனிக்கிழமை அன்று (அக். 29) கொடுத்த புகாரை தொடர்ந்து, 28 வயதான இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விலங்கு நல ஆர்வலரான மினு சேத், ஒரு வீடியோ ஆதாரம் ஒன்றையும் போலீசாரிடம் … Read more

கேபிள் பாலம் அறுந்து விழுந்த இடம் விபத்துக்கு முன்பும், பின்பும் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு..!

குஜராத்தின் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் அறுந்து விபத்துக்குள்ளாகும் முன்பும், அதன்பிறகும்  செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு அமைப்பான Planet Labs புகைப்படம் எடுத்துள்ளது. அந்த புகைபடத்தை  Planet Labs தற்போது வெளியிட்டுள்ளது. Source link

36 பந்துகளில் 62 ஓட்டங்கள்! இறுதிவரை போராடிய வீரர்..வெற்றிவாகை சூடிய இங்கிலாந்து

 நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் விளாசினார் 73 ஓட்டங்கள் விளாசிய பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார் உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. பிரிஸ்பேனில் இன்று நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் … Read more

வியாசர்பாடியில் பாலம் மழைவெள்ளத்தில் சிக்கிய மாநகர பேருந்து! மீட்கப்படும் வீடியோ…

சென்னை: வியாசர்பாடியில் மழைவெள்ளத்தில் சிக்கிய மாநகர பேருந்து, அங்கிருந்து மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும், மத்தியசென்னை, தென்சென்னைக்கு கொடுக்கும் முன்னுரிமை வடசென்னைக்கு கொடுக்காததால், வியாசார்பாடி பாலம இன்று காலை மழைநீரால் சூழப்பட்டு, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக, பேருந்து மீட்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, வடசென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீரால் சூழப்பட்டு உள்ளது. இந்த … Read more

ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: சென்னை மாஜி ராணுவ வீரருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

சேலம்: ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மாஜி ராணுவ வீரருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சென்னை ஆவடி பூம்புழல்நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (49). மாஜி ராணுவ வீரர். கடந்த 2018ம் ஆண்டு கோவையில் இருந்து சென்னை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அதே ரயிலில், கோவையை சேர்ந்த 13 வயது சிறுமியும், அவரது தாயும் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது மாஜி … Read more

இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

சென்னை: இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவருக்கு ரூ.5,000 அபராதமும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 730 கோடி பரிவர்த்தனைகள்: நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தகவல்

டெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 730 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அது 7.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி … Read more

சாக்கு போர்த்தியபடி நூதன பைக் திருட்டு… மதுரையில் தொடரும் இரவு நேர கொள்ளை!

மதுரையில் சாக்குமூட்டையை போர்த்திகொண்டு போதையில் தடுமாறியபடி இரு சக்கர வாகனத்தை நூதனமாக திருடி சென்றுள்ளனர் நூதன திருடர்கள். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுரை மேல் அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போன நிலையில் அருகில் தேடிப்பார்த்த நிலையில் கீரைத்துறை … Read more