கேபிள் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்த இடத்தில் பிரதமர் ஆய்வு..!
குஜராத்தில் 140க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட கேபிள் பாலம் விபத்து நிகழ்ந்த பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஹெலிகாப்டர் மூலம் மோர்பி நகருக்கு சென்ற பிரதமர், முதலமைச்சர் பூபேந்திர படேலுடன் இணைந்து, மீட்புப்பணிகளை பார்வையிட்டார். மீட்புப்படை வீரர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். விபத்தில் படுகாயமடைந்து, மோர்பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். Source link