தமிழகத்தில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | கவனிக்கத்தக்க 10 தகவல்கள்

சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எழும்பூர் தமிழ் சாலை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன … Read more

நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை and அம்சங்கள்

புதுடெல்லி: நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் 5ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் நோக்கியா தற்போது ஜி60 5ஜி ஸ்மார்ட்போனை களம் இறக்கியுள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே … Read more

நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு: ஐகோர்ட் உத்தரவு!

புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இழப்பீடு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் … Read more

தேசிய திறமை தேடல் திட்டத்தை நிறுத்தக் கூடாது: ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தல்!

என்.சி.இ.ஆர்.டி முலம் நடத்தப்பட்டு வந்த ’ தேசிய திறமை தேடல் திட்டத்தை’ (NTSS) நிறுத்தக்கூடாது என வலியுறுத்தி ஒன்றிய அரசின் கல்வி அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) 1961 ஆம் ஆண்டு இந்திய அரசால் கல்வியில் முன்னேற்றம் மற்றும் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டது. அது அமைக்கப்பட்ட உடனேயே, பல திட்டங்களை அது அறிவித்தது. திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை … Read more

ரூ.1,000 கோடி இழப்பீடு: தேர்தல் ஆணையம் மீது இம்ரான் கான் அவதூறு வழக்கு!

தன்னை தகுதி நீக்கம் செய்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக, அவதூறு வழக்கு தொடரப் போவதாக, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், … Read more

Gujarat Bridge Collapse : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர்… பாலத்தையும் பார்வையிட்டார்!

குஜராத்தின் மோர்பி நகரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொங்கு பாலம் ஒன்று, நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்து, தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்துள்ளனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. மோர்பி பாலம், விபத்து நிகழ்வதற்கு ஐந்து நாள்களுக்கு முன்னர்தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குஜாராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிகளை முறையாக பின்பற்றாமல், அவசர அவசரமாக … Read more

இந்திய அணியின் தோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர்: சோகத்தில் உயிரிழக்கும் நகைச்சுவை வீடியோ

இந்தியா தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் இந்திய ரசிகர் இறந்து கொண்டிருக்கும் போது அவரை மரோ முஜே மரோ கை காப்பாற்றுகிறார். சுமார் 3.4 மில்லியன் மக்கள் பார்த்ததுடன், 534k மக்கள் வீடியோவை லைக் செய்துள்ளனர். தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் இறக்கும் இந்திய ரசிகரை காப்பாற்ற முயற்சிக்கும் மற்றொரு ரசிகரின் நகைச்சுவையான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியை இந்திய அணி அபாரமாக வென்றதை தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர் ஒருவர் … Read more

திருக்குறள் புத்தக மோசடி வழக்கை தினமும் விசாரித்து 6 மாதத்திற்குள் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருக்குறள் புத்தக மோசடி வழக்கின் விசாரணையை தினசரி அடிப்படையில் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஹக்கீம் அஜ்மல்கான் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் கடந்த 2010ல் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 100 திருக்குறள் புத்தகங்களை ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கினால் 37வது மாத முடிவில் ரூ.46,900 முதிர்வு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல் கவர்ச்சிகரமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதை நம்பி ஏராளமானோர் திருக்குறள் புத்தகத்தை வாங்கி முதலீடு … Read more

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஏர் சுவிதா முறையை ரத்து செய்க: தயாநிதிமாறன் எம்.பி.

சென்னை: சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஏர் சவிதா முறையை ரத்து செய்ய வலியுறுத்தி விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, சுகாதார துறை அமைச்சர் மனசுக் மண்டோவியாவுக்கு தயாநிதிமாறன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். கொரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்களை கண்காணிக்க ஏர் சவிதா இணையப்பக்கம் உருவாக்கப்பட்டது.

குஜராத் மோர்பி பால விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

சூரத்: குஜராத் மாநிலம் மோர்பி பால விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அவருடன், குஜராத் முதல்வர், அம்மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரும் உடனிருந்தனர். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.இதனை அடுத்து சாத் பூஜை மற்றும் விடுமுறையையொட்டி கடந்த … Read more