மதுரை: பைக் மீது மோதிய அரசு பேருந்து – மருத்துவமனையிலிருந்து திரும்பிய இருவர் பலியான சோகம்

உசிலம்பட்டி அருகே ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் தலை சிதறி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி எனும் இடத்தில் மதுரையிலிருந்து போடியை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சோழவந்தானை அடுத்துள்ள திருவாழவாயநல்லூரைச் … Read more

”அது Lay off இல்ல time off… அவங்களுக்கு ஓய்வு கொடுத்துருக்கோம்”- பைஜூஸின் அடடே விளக்கம்!

ஆன்லைனில் கல்வி கற்பதில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் பைஜூஸ் அண்மைக்காலமாக ஆட்குறைப்பு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்திய கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக பைஜூஸ் CEO ரவீந்திரன் அறிவித்தார். இது பைஜூஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பேரிடியாக இருந்திருக்கிறது. பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் பைஜூஸ் மீதும் அதன் CEO பைஜூ ரவீந்திரன் மீதும் வழக்குத் தொடர ஆயத்தமாகியிருக்கிறார்கள். … Read more

ஸ்ருதிகா உடன் நடனமாடிய செப் தாமு

பிரபல சமையல் கலைஞரான செப் தாமு முன்னதாக பல தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவரை வேறொரு கோணத்தில் காட்டிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். அவரை மட்டுமல்ல, சமையல் நிகழ்ச்சியை கூட காமெடியாக மாற்ற முடியும் என நிரூபித்து காட்டி ஹிட் அடித்த நிகழ்ச்சி அது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே இன்று பிரபலங்களாக வலம் வருகின்றனர். அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 … Read more

பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக நடக்கும் தீண்டாமை!

தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. இதற்காக அரசு சிறப்பு நிதியாக ரூ.5,000 ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டிக்குப்பம் ஊராட்சியின் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் செல்வராணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திறந்தவெளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நல பணியாளர் ஊராட்சி மன்ற செயல்பாடுகள் குறித்து அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென … Read more

135 பேரை பலி வாங்கிய மோர்பி தொங்கு பாலத்தில் பிரதமர் மோடி ஆய்வு..!

135 பேரை பலி வாங்கிய குஜராத்தின் மோர்பி நகர பாலம் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 135-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்து தொடர்பாக இதுவரை … Read more

பக்கத்துல இருந்து கஷ்டப்படுறதைவிட, விலகி நின்னு ரசிக்கிறதும் காதல்தான் | ஜன்னலோரக் கதைகள் – 8

அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த தோழி அவள். அடிக்கடி பேசிக் கொள்ளவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் அவள் பகிரும் அனைத்தையும் தவறாமல் பார்த்து ஹார்ட் அழுத்திவிடுவது என் இயல்பு. படங்களுடன் அவள் பகிரும் கமென்ட்ஸை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று மனதில் நினைத்துக் கொள்வேன். நீண்ட இடைவெளிக்குப் பின் ஃபோனில் தொடர்பு கொண்டு, `உன்னை மீட் பண்ணணும்’ என்று சொன்னாள். `குழந்தை, குடும்பம் என்று ஓடிக்கொண்டே இருப்பதால் வெளியில் வந்து நேரம் செலவழிப்பது கொஞ்சம் சிரமம்’ என்றேன். `சரி, … Read more

சென்னை மெட்ரோவில் அக்டோபரில் மட்டும் 61.56 லட்சம் பேர் பயணம்

சென்னை: அக்.1-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் 61,56,360 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக அக்.21 தேதியன்று 2,65,683 பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. 01.01.2022 முதல் … Read more

120 பேர் பலியான பயங்கரவாத தாக்குதல்: சர்வதேச உதவிகளை கோரும் சோமாலியா

மொகதிசு: சோமாலியாவில் 120 பலியான பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக சனிக்கிழமை கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 120 பேர் பலியாகினர் பலர் படுகாயமடைந்தனர். இந்த கார் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உதவ சர்வதேச நாடுகளுக்கு சோமாலியா அதிபர் ஷேக் முகமத் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “சர்வதே சமூகத்திற்கு நான் ஒரு … Read more

இலைகள்தான் பல மொழி, மரம்தான் இந்தியா – ஆளுநர் ஆர்.என்.ரவி

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தை கொண்டாடும் வகையில் நாகர்கோவில் அருகே இறைச்சகுளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பாரதி இதிகாச சங்கலன சமிதி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய ஆளுநர் கூறுகையில், மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பல பகுதிகள் பிரிந்து சென்ற நிலையில் கேரளாவில் இருந்து தமிழ் மொழி பேசும் மக்கள் தமிழகத்தோடு இணைந்தது நினைவு கூறும் வகையில் குமரி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சர்தார் … Read more

குஜராத் தொங்கு பாலத்தில் மிகப்பெரிய ஊழல்: அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரிக் கேள்வி!

குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்த 30ஆம் தேதி விழுந்து விபத்துக்குள்ளானது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட நிலையில், பாலம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் … Read more