கனடாவில் நேரிட்ட விபத்தில் நடிகை ரம்பா, குழந்தைகள் காயம் – மகள் சாஷாக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!

கனடாவில் நேரிட்ட விபத்தில் நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தைகள் காயமடைந்தனர். உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்பா, தொழிலதிபர் இந்திரகுமார் பத்மனாதினை திருமணம் செய்து, கனடாவில் வசித்து வருகிறார். அவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், Ontarioவில் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு காரில் ரம்பா சென்றுள்ளார். அப்போது அவர் கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியுள்ளது. இதில் ரம்பா, அவரது குழந்தைகள், உடன் வந்த பெண் லேசான … Read more

பருவமழையை எதிர்கொள்ள ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார்! செந்தில் பாலாஜி

கோவை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று  கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது என்றவர், கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் 846 இடங்களில் மக்கள் சபை கூட்டம் இன்று நடக்கிறது. … Read more

தங்கை மகளின் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்று திரும்பியபோது ஓடும் ரயிலில் மாரடைப்பால் விவசாயி பரிதாப சாவு

செங்கல்பட்டு: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் விமல் ராஜ் (57). விவசாயியான இவர், தனது மனைவி செல்வி (50), மகள் மெர்ஸி (13) ஆகியோருடன் தனது தங்கை மகளின் நிச்சயதார்த்த விழாவிற்காக சென்னை வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு செல்ல தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் தனது குடும்பத்துடன் புறப்பட்டார். பெருங்களத்தூர் அருகே வந்தபோது திடீரென விமல்ராஜ்க்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே சக பயணிகள் அவருக்கு … Read more

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1,750 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காலையில் 150 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 1750 கனஅடியாக உயர்ந்துள்ளது. 24 அடி உயரமுள்ள ஏரியில் தற்போது நீர்மட்டம் 20.42 அடியாக அதிகரித்துள்ளது.

சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

பெங்களூரு:  சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என கர்நாடக மாநிலத்தின் 67வது உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். மறைந்த புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை என அவர் கூறினார்.

பாஜக நிர்மல் குமார் நேரில் ஆஜராக சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ்! என்ன வழக்கு தெரியுமா?

பா.ஜ.க மாநில தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், நேரில் ஆஜராக கோரி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதி அளிக்காததால் அவரது வருகை இந்த ஆண்டு தள்ளிப்போனதாக சி.டி.ஆர் நிர்மல் குமார் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மொகிந்தர் அமர்நாத் என்பவர் மத்திய குற்றப்பிரிவு … Read more

உயர்ந்தது ஜிஎஸ்டி வசூல்: மக்களுக்கு மட்டுமல்ல…அரசுக்கும் அக்டோபர்தான் `பட்டாசு’ தீபாவளி!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளால் வியாபாரம் நாடு முழுவதும் விரைவாக நடைபெற்றுள்ளதால், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 2022-க்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,51,718 கோடியாக அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் பணவீக்கம், எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் தொடர் விலையேற்றத்தையும் கடந்து, இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதை இந்த மறைமுகவரி வருவாய் பிரதிபலிக்கிறது. ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக 2-வது அதிகபட்ச வருவாய் ஈட்டிய … Read more

வரலட்சுமி படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர்

சமீபகாலமாக கன்னடத்தில் வெளியாகும் படங்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னடத்தில் கடந்த 20 வருடங்களில் 19 படங்களை இயக்கிய இயக்குனர் தயாள் பத்மநாபன் தனது 20வது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார். கன்னடத்திலேயே படங்களை இயக்கி வந்தாலும் இவர் தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் பிறந்தவர். கொன்றால் பாவம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சந்தோஷ் பிரதாப் … Read more

மக்களைக் காப்பாற்றுவதே நமது இலக்கு – முதலமைச்சர் பேச்சு..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்குப் பருவமழை துவங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மையம், மழைப் பொழிவு இந்த மாதம் நான்காம் தேதி வரை நீடிக்கும் என்றும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மழைப் பொழிவின் அளவு சற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வடகிழக்குப் பருவமழைக்கான தொடர் நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டார். … Read more

கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்திடம் பாலம் கட்டும் பணி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!

பாலம் கட்டுவதில் எந்த அனுபவமும் இல்லாத, கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டது ஏன்..? என்று, அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்து தொடர்பாக இதுவரை … Read more