“கங்கனா ரணாவத் பாஜக-வில் சேர்வது வரவேற்கத்தக்கது, ஆனால்..!" – ஜே.பி.நட்டா சொல்வதென்ன?

வெள்ளித்திரையைத்தாண்டி, நாட்டில் வெளிப்படையான அரசியல் கருத்துகளால் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வரும் சினிமாத்துறையினரில் குறிப்பிடத்தக்கவர் இந்தி நடிகை கங்கனா ரணாவத். கடந்த சில மாதங்களாக இவரின் கருத்துகள் பா.ஜ.க-வை ஆதரிப்பதுபோல இருப்பதாக அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்பட்டது. மேலும், விரைவில் கங்கனா ரணாவத் அரசியலில் குதிக்கப்போகிறார் எனப் பேச்சுக்களும் அடிபட்டன. கங்கனா ரணாவத் அந்த வரிசையில் முன்னதாக அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை எனக் கூறிவந்த கங்கனா ரணாவத், “அனைத்து வகையான பங்கேற்புக்கும் நான் வெளிப்படையாக இருப்பேன். … Read more

திருச்சி தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து – 2 பேர் படுகாயம்..!

திருச்சி தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில், தீயணைப்புத் துறை அதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இன்று காலை தீயணைப்பு வீரரான பிரசாந்த், பெரிய சிலிண்டர் ஒன்றிலிருந்து சிறிய சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வாயு அழுத்தம் அதிகமாகி, சிறிய சிலிண்டர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் காலில் பலத்த காயமடைந்த பிரசாந்த் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரி சரவணன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

“நான் பட்டியலின பெண் தலைவர் என்பதால் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை” – தொட்டிக்குப்பம் கிராம சபைக் கூட்டத்தில் ஆவேசம்

கள்ளக்குறிச்சி: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டிக்குப்பம் ஊராட்சியில் மழையில் குடைபிடித்தபடி கிராம சபைக் கூட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்றனர். உள்ளாட்சித் தினத்தை ஒட்டி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டிக்குப்பம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் செல்வராணி தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. திறந்தவெளியில் நடைபெற்றக் கூட்டத்தில் மக்கள் நலப்பணியாளர் ஊராட்சி செயல்பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தார். அப்போது மழை பெய்யத் துவங்கியதால் கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் குடை பிடித்தபடி அமர்ந்திருந்தனர். அப்போது ஊராட்சி … Read more

நயன்தாராவும், கோவை குண்டு வெடிப்பும்.. வன்மத்தை கக்கும் அரசியல்

கோவை குண்டுவெடிப்பையும், நயன்தாராவுக்கு குழந்தைகள் பிறந்ததையும் தொடர்புபடுத்தி பேசி, ஆளும் அரசை விமர்சிப்பதாக எண்ணி, கீழ்த்தனமான அரசியல் செய்து வரும் அதி புத்திசாலிகளுக்கு பதிலடி கொடுக்காமல், ஆளும் அரசு அமைதி காப்பது வியப்பாக உள்ளது. வாடகை தாய் முறையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தைகளை பெற்றெடுத்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதற்கு சட்ட ரீதியான காரணங்கள் உள்ளன. திருமணமாகி 5 வருடங்கள் ஆன பிறகே வாடகை தாய் மூலம் ஒரு தம்பதி பெற்றோர் ஆக … Read more

பள்ளி பாடத்திட்டத்தில் புனீத் ராஜ்குமார் சாதனைகள் – முதல்வர் அறிவிப்பு!

மறைந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமார் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சாதனைகள் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். பிரபல கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார், 46, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் மறைந்து ஓராண்டு ஆகி உள்ளதை அடுத்து, அவரது நினைவு தினத்தை ஒட்டி, கர்நாடக மாநில அரசு சார்பில் மாநில … Read more

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்… சென்னையில் அண்ணாமலை கைது

நடிகைகள் குஷ்பு, நமீதா, காய்திரி ரகுராம் உள்ளிட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் குறித்து, அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கைது செய்யக் கோரியும், திமுகவை கண்டிக்கும் வகையிலும் பாஜக மகளிரணி சார்பில், இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.  கடந்த … Read more

உடல்நலக்குறைவு காரணமாக சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி…

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து,  மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என அக்கட்சி அறிவித்து உள்ளது.  81வயதாகும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு  இன்று காலையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் வெளியானதும், அவரது கட்சி தொண்டர்கள் … Read more

பம்மதுகுளம்- திருவள்ளூர் சாலையில் சிக்னல் அமைக்க மக்கள் கோரிக்கை

புழல்: சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சிக்னல்கள் இல்லை. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படாததால் வாகனங்கள் கண்டபடி செல்கிறது. இதன்காரணமாக அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பகுதியில் உள்ள சோலையம்மா நகர், காந்திநகர், அம்பேத்கர் நகர், வி.பி.சிங் நகர், பெருமாள் அடிபாதம், வரபிரசாத் ராவ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக … Read more

திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை முயற்சி

திருப்பூர்: திருப்பூரில் தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்த 17 வயது மாணவி ஆனந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. படுகாயமடைந்த மாணவி ஆனந்தி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீட் தேர்விற்காக கடந்த 2 மாதமாக படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் மாணவி ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது.

குஜராத்தில் தொங்கும் பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலி: நவம்பர் 2-ம் தேதி துக்க தினமாக கடைப்பிடிக்க குஜராத் அரசு உத்தரவு

டெல்லி: குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான துக்கம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோர்பி நகரில் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம், கடந்த 30ம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 135 பேர் நீரில் மூழ்கியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். இதில் 47 பேர் குழந்தைகள் ஆவர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை … Read more