TNPSC : நில அளவையர், வரைவாளர் தேர்வு – நுழைவுச்சீட்டை பதிவிறக்குவது எப்படி?

TNPSC Admit Cards 2022 RELEASED : 789  நில அளவையர், 236 வரைவாளர், 55 சர்வேயர்கள் என மொத்தம் 1089 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்ப உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 6) அன்று நடைபெறுகிறது. இதன் முதல் தாள் காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.30 வரையும், இரண்டாம் தாள் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணிவரை இரண்டு பிரிவாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அந்த … Read more

மனைவி தனிமையில் வாடுவதை உணராமல் போதைக்கு அடிமையானேன்! அவள் இறந்த பிறகு… பிரபல கிரிக்கெட் வீரர் உருக்கம்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு போதைக்கு அடிமையான ஜாம்பவான் வாசிம் அக்ரம். சுயசரிதை நூலில் கூறியுள்ள தகவல்கள்.  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கோகைன் போதைக்கு அடிமையானதாக பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், கடந்த 2003ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் இவர் 900 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இந்நிலையில் Sultan: A Memoir என்ற … Read more

குஷ்பு உள்பட பெண்கள் குறித்து தரக்குறைவான பேச்சு:  திமுக நிர்வாகி சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு…

சென்னை: குஷ்பு உள்பட பெண்கள் குறித்து தரக்குறைவாக  பேசிய திமுக நிர்வாகி சாதிக் மீது கடுமையான விமர்சனங்கள எழுந்த நிலையில், பாஜக பெண்கள் அமைப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து சாதிக்மீது,  பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் சைதை சாதிக். இவர், கடந்த 26 ஆம் … Read more

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டு சிறை

கும்பகோணம்: சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோர்பி பால விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

சூரத்: குஜராத் மாநிலம் மோர்பி பால விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அவருடன், குஜராத் முதல்வர், அம்மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரும் உடனிருந்தனர். முன்னதாக, பாலம் விபத்தின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டியதுடன், அவர்களிடம் விபத்து தொடர்பாக கேட்டறிந்தார்.

அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரியாக ரூ.1.51 லட்சம் கோடி வசூல்: ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: கடந்த அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரியாக ரூ.1.51 லட்சம் கோடி வசூலானதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6 சதவீதம் அதிகம் என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி ஒரு மறைமுக வரி. இது இந்தியா முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் … Read more

சாக்லேட் திருடிய மாணவி தற்கொலை| Dinamalar

அலிபுர்துவார்,மேற்கு வங்கத்தில் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள சுபாஷ் பாள்ளியில், கல்லுாரி மாணவி, தன் சகோதரியுடன் சமீபத்தில் ஒரு வணிக வளாகத்துக்கு சென்றார். அங்கு ஒரு கடையில் சில சாக்லேட்டுகளை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார். இதை கடைக்காரர் பார்த்துவிட்டதால், அதற்கு பணம் செலுத்தி விட்டார். ஆனால், அந்தக் கடைக்காரர் கண்காணிப்பு கேமராவில் பதிவான ‘வீடியோவை’ சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இதைப் பார்த்த மாணவி, நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் … Read more

கனடாவில் கார் விபத்து : லேசான காயத்துடன் தப்பிய ரம்பா, குழந்தைகள்

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார். தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து திரும்ப அழைத்து வரும் போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் காரின் முன் பக்கம் சேதமடைந்துள்ளது. விபத்தில் சிக்கிய காரின் புகைப்படங்களைப் பகிர்ந்து ரம்பா டுவிட்டரில், “குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும் வழியில் ஒரு சந்திப்பில் எங்கள் கார் மீது மற்றொரு கார் மோதியது. நான், எனது குழந்தைகள், செவிலித் தாய் … Read more

அமெரிக்க தூதரக பிரதிநிதி வன்னிக்கு விஜயம்

அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக திரு. டக்லஸ் சோனெக் அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் திங்கட்கிழமை (24) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார். வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் அவரை வரவேற்று, நல்லிணக்கம், அபிவிருத்தி, விவசாயம், பாதுகாப்பு மற்றும் அக்கறைக்குரிய ஏனைய பொதுவான விடயங்களில் விசேட கவனம் செலுத்தி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விளக்கமொன்றை வழங்கினார். … Read more