கர்நாடக அரசு அழைப்பு.. பெங்களூரு சென்றார் நடிகர் ரஜினி..!

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் பெங்களூரு சென்றார் நடிகர் ரஜினி காந்த். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து, திரையுலகில் அவருடைய கலைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு … Read more

‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க ’- முத்தூட் ஃபைனான்ஸின் புதிய திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடன் என்பிஎஃப்சி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ், தங்களின், சமீபத்திய அனைத்து ஊடகம் முழுவதிலும்  சந்தைப்படுத்தும்  பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்தது, அதில் அவர்களின் புதிய சின்னமான ‘கோல்ட்மேன்’ இடம்பெறும், மேலும் இந்த பிரச்சாரம், அவர்களின் பல்வேறு கடன் தேவைகளுக்காக ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க ‘ என்ற செய்தியை எடுத்துச்செல்லும்.  மைத்ரி அட்வர்டைசிங் ஒர்க்ஸ் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்டு  மற்றும் வடிவமைக்கப்பட்ட இந்த பிரச்சாரமானது, வீட்டில் செயலற்ற தங்கத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் … Read more

மழையால் பாதிப்பு | நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.1) முகாம் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி … Read more

தென் அமெரிக்காவில் வலிமையடையும் இடதுசாரிகள் – உலக அளவில் பரவுமா தாக்கம்?

பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றிருக்கிறார். சில்வாவின் வெற்றி வெறும் பிரேசிலில் வெற்றியாக மட்டும் உலக நாடுகளால் பார்க்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரிவை சந்தித்து வந்த இடதுசாரிகளுக்கு தென் அமெரிக்காவில் நடந்து வரும் இந்த மாற்றம் பெரும் நம்பிக்கை அளித்திருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. தென் அமெரிக்க நாடுகளில் இருக்கும் அரசியல் நாம் வெளியிலிருந்து பார்ப்பதைவிட சிக்கலானது. இடதுசாரிகட்சிகளில் தாயகமாக கருதப்பட்டு … Read more

பதவி உயர்வு வாய்ப்புகளை பறிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கருவூலக் கணக்குத் துறையில் பணி நியமனங்களும், பதவி உயர்வும் மேற்கொள்ளப்படும் போது, அதற்கான விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை தமிழக அரசின் நிதித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கருவூலக் கணக்குத் துறையில் பணியாற்றும் உதவி கணக்கு அலுவலர்களுக்கு திட்டமிட்டு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், தேவையின்றி பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அதிகாரிகளுக்கு முறையாக கிடைக்க வேண்டிய … Read more

தவறுகளை அரசு சரி செய்து வருகிறது: பிரதமர் மோடி பேச்சு!

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, 1913அம் ஆண்டு மங்கார் என்ற மலை பகுதியில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் 1,500க்கும் மேற்பட்ட பில் பழங்குடியினர் சுற்றி வளைத்து படுகொலை செய்யப்பட்டனர். மங்கார் படுகொலையை நினைவுகூரும் வகையில், ‘மங்கார் தம் கி கவுரவ் கதா’ என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நிகழ்ச்சி ஒன்று இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் … Read more

மனித தலையுடன் நாய்; ‘அடுத்து உனது தலை தான்’ வாசகம்!

துப்பாக்கி என்றால், பொதுவாக நமது நினைவுக்கு வருவது ஹாலிவுட் சினிமாக்கள் தான். துப்பாக்கியால் எதிரிகளை சுட்டு பொசுக்குகின்ற கொடூர காட்சிகளை ஹாலிவுட் படம் தான் நமக்கு அதிகமாக காட்டின. ஆனால் இன்று துப்பாக்கிகளுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிற நாடுகளில் அமெரிக்கா தான் முன்னணியில் உள்ளது. அந்தளவுக்கு துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டதால், அமெரிக்க அரசு துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாமல், திணறி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் டெக்சாஸ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் … Read more

Go Back Modi Trending : மோர்பி பால விபத்து – பலியெடுத்த அலட்சியம்… உச்சக்கட்ட கோபத்தில் குஜராத்!

குஜராத்தின் மோர்பி நகரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொங்கு பாலம் ஒன்று, நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்து, தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்துள்ளனர்.  இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. மோர்பி பாலம், விபத்து நிகழ்வதற்கு ஐந்து நாள்களுக்கு முன்னர்தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குஜாராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிகளை முறையாக பின்பற்றாமல், அவசர அவசரமாக … Read more

போராட்டம் நடத்துவதற்கு தடை: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

திருப்பூரில் இயங்கி வரும் அம்மன் ஜுவல்லர்ஸ் நகை கடை உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மங்கலம் சாலையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் போது தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், அங்குள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனையில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.  எனவே மக்கள் நடமாட்டம் நிறைந்த மங்கலம் சாலைக்கு … Read more

`ஜெயிலர்' படத்தையடுத்து ரஜினியை இயக்கும் இரண்டு இயக்குநர்கள் – நவம்பர் 5-ம் தேதி அறிவிப்பு?!

‘தர்பார்’ படத்திற்குப் பின் லைகாவின் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறார் என்றும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் பூஜையும் வருகிற 5-ம் தேதி சென்னையில் நடக்கின்றன என்றும் கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகின்றன. ரஜினி இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவருகிறார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வில்லனாக நடித்துவருகிறார். ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே, ரஜினி அடுத்து தன் லைன் அப்களை அறிவிக்கப் போகிறார். இதுகுறித்து விசாரித்தோம். … Read more