சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: அரியலூர் மகிளா நீதிமன்றம்

அரியலூர்: 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் அண்ணாத்துரைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு அளித்துள்ளனர். 2 சிறுமிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு தரவும் அரியலூர் மகிளா நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியில் மழைநீரில் சிக்கிய மாநகர பேருந்து: மீட்க தீயணைப்புத்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை வியாசர்பாடியில் மழைநீரில் பேருந்து சிக்கியுள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் பேருந்து சிக்கியது. மழைநீரில் தேங்கிய பேருந்தை மீட்க தீயணைப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நடிகர் சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்க முடிவு

மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு ‘ஒய் பிளஸ்‘ பாதுகாப்பு வழங்க மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது. சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருவாரூர்: சாலை போடாமலேயே போடப்பட்டதாக… ஆர்டிஐ-யில் வெளியான அதிர்ச்சி தகவல்

திருவாரூர் அருகே புதிய சாலை போடாமலேயே போடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூர் ஊராட்சி சத்திரக்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தி. வார்டு உறுப்பினரான இவர், மாங்குடியில் இருந்து பெரியதும்பூர் செல்லும் சாலை உள்ள சத்திரக்கட்டளையில் இருந்து புதுப்பத்தூர் ஆற்றுபாலம் வரை 1.5 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் கோரியிருந்தார். அதற்கு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் … Read more

"கேபிள் பாலம் விபத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது!" – கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் மீது சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ள குற்றச்சாட்டு மக்களை திசை திருப்பும் முயற்சி என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதில் கூறியுள்ளார். இரட்டை இலை லஞ்ச வழக்கு, தொழிலதிபர் மனைவியிடம் ரூபாய் 200 கோடி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தவாறு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஆம் … Read more

பலாத்கார வழக்கில் பரிசோதனை உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு| Dinamalar

புதுடில்லி, ‘பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் பரிசோதனை மேற்கொள்வது குற்றமாக பார்க்கப்படும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில், இரண்டு விரல் பரிசோதனை நடத்தப்படும். அந்தப் பெண் ஏற்கனவே உடலுறவில் ஈடுபட்டுள்ளவரா என்பதை உறுதி செய்ய இந்தப் பரிசோதனை செய்யப்படும். இந்நிலையில், பாலியல் பலாத்காரம் தொடர்பான ஒரு வழக்கில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, இந்த இரட்டை … Read more

'காலா, வலிமை' கதாநாயகி ஹுமா குரேஷி காதல் முறிவு

ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி. அதன் பிறகு அஜித் நடித்த 'வலிமை' படத்திலும் கதாநாயகியாக நடித்தார். தற்போது 'டபுள் எக்ஸ்எஸ், டர்லா' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் 'டபுள் எக்ஸ்எல்' படத்தை ஹுமா, அப்படத்தின் ரைட்டரான முடாசர் அசிஸ் என்பவருடன் இணைந்து தயாரித்தும் வருகிறார். ஹுமா, முடாசர் இருவரும் கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வந்தார்களாம். இப்போது தங்களது காதலை முறித்துக் கொண்டுள்ளதாக செய்திகள்வெளியாகி உள்ளன. … Read more

கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

ராமநகர்: 3 பேர் கைது ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமம் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த பசவலிங்க சுவாமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி நீலாம்பிகா, கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருதனஞ்ஜெய சுவாமி, வக்கீலான மகாதேவய்யா ஆகியோரை நேற்று முன்தினம் மாகடி போலீசார் … Read more

டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

பிரிஸ்பேன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தன்படி இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் … Read more

பிரேசிலில் நூலிழையில் வெற்றியை தவறவிட்ட அதிபர் போல்சனாரோவுக்கு ஆதரவாக லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்!

பிரேசிலியா, உலகின் 4-வது பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபா் ஜெயிா் போல்சனாரோ மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும், இடதுசாரி கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவருமான லூலா டி சில்வா களம் இறங்கினார். தேர்தலில் லூலா 50.9 சதவிகித வாக்குகளும், பொல்சொனாரோ 49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா டி … Read more